internet

img

விண்டோஸ் 10-ல் எம்எஸ் பெயிண்ட் அப்ளிகேஷன் நீக்கப்படாது

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் எம்எஸ் பெயிண்ட் அப்ளிகேஷனை நீக்கப்போவது இல்லை என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு விண்டோஸ் 10 இயங்குதளத்திலிருந்து எம்எஸ் பெயிண்ட் அப்ளிகேஷனை நீக்க உள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது. இதனை அடுத்து, மைக்ரோசாஃப்ட்டின் இந்த முடிவுக்கு விண்டோஸ் கணினி பயன்படுத்தும் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விண்டோஸ் இயங்குதளங்களில் 1985-ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் செயலி பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மைக்ரோசாஃப்ட்டின் முதன்மை ப்ரோகிராமர் பிராண்டன் லேபிளாங்க், “அடுத்த மாதம் வெளியாக உள்ள விண்டோஸ் 10 அப்டேடான 1903-ல் எம்எஸ் பெயிண்ட் அப்ளிகேஷன் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இனிவரும் மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்களிலும் இது கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


;